கும்பகோணம்

கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் அன்னை கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா தற்காலிக மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 1,25,786/- ரூபாய் மதிப்புடைய உபகரணங்களை சங்கத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட ஆளுநர் பாலாஜி, பொருளாளர் வெங்கடேசன், உதவி ஆளுநர் மெய்யப்பா, மாவட்ட பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைவர் கோபிதாஸ் ஆகியோர் வழங்கினர்.

கும்பகோணம்

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் கொரோனோ குறித்த ஆய்வு கூட்டம்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் தஞ்சாவூர் மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் ஹமசந்த்காந்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம் மற்றும் திருவிடைமருதூர், திருபுவனம், ஆடுதுறை, வேப்பத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள், பொதுசுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் நேர்முக உதவியாளர் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வன், மருத்துவர் தேவகுமாரி, வட்டார சுகாதார ஆய்வாளர் ஆசைதம்பி, சுகாதார ஆய்வாளர்கள் ஜோதினாதன், வைத்தியநாதன், கோமதி பாலமுருகன் […]

கும்பகோணம்

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் இதுவரை 38,200 வசூல்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோரின் ஆலோசனையின்படி திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கொரோனா வைரஸ் 2வது அலை துவங்கிய காலத்திலிருந்து நேற்று வரை திருநாகேஸ்வரம் பேரூராட்சி பகுதிகளில் மாஸ்க் அணியாமல் செல்லக்கூடிய நபர்களிடமிருந்து சுமார் 191 பேரிடமிருந்து அபராதம் விதிக்கப்பட்டு ரூபாய் 38,200 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநாகேஸ்வரம் பகுதியில் கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கும்பகோணம்

கும்பகோணத்தில் ஹலிமா அறக்கட்டளை சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

கும்பகோணம் அருகே செட்டி மண்டபம்ஹலிமா நகர் பள்ளிவாசலில் நோன்பு (இப்தார்) திறக்கும் நிகழ்ச்சி ஹலிமா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ். எம். சாகுல் அமீது தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிக் சோஷியல் வெல்பேர் அசோஸியேஷன் (கிஸ்வா) திட்ட தலைவர் முஹம்மது ஜியாவுதீன், முன்னாள் நிர்வாகிகள் பிர்தௌஸ் கான், ஹாஜி.அஹமது தம்பி, அப்துல் சுபஹான், அக்பர் அலி, சம்சுதீன் முகமது அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிஸ்வா தலைவர் ஜாகிர்உசேன், செயலாளர் சிராஜ்தீன், பொருளாளர் முகமது அஸ்லம், துணைத்தலைவர் […]

கும்பகோணம்

அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய நவீனரக இருசக்கர வாகனம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் இயந்திரவியல் துறையில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் எரிபொருள் செலவையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் எலக்ட்ரிக் பைக் உருவாக்கியுள்ளனர். இக்கல்லூரியின் எந்திரவியல் துறையில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஈஸ்வரமூர்த்தி, அனந்தகிருஷ்ணன், கோகுல்வேல், ஹரிஹரன் ஆகியோர் இணைந்து ஸ்மார்ட் எலக்ட்ரிக் பைக்கை பேராசிரியர் விக்னேஷ் வழிகாட்டுதலின்படி வடிவமைத்துள்ளனர். மேலும் கண்டுபிடிப்பு பற்றி மாணவர்கள் கூறியதாவது:- எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எரிபொருளின் செலவு […]

கும்பகோணம்

கும்பகோணத்தில் அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

கும்பகோணம் பெருநகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பெருநகர கழக செயலாளர் எஸ். குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளரும் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம். ரெங்கசாமி கலந்து கொண்டு பேட்டை தெரு, தாலுகா காவல் நிலையம், மொட்டைக்கோபுரம், உச்சிப்பிள்ளையார் கோவில், செல்வம் தியேட்டர் ஆகிய ஐந்துக்கு மேற்பட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தலை […]

கும்பகோணம்

கும்பகோணத்தில் எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணம் எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டைனை விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்தவர் எண்ணெய் வியாபாரி ராமநாதன் (63). இவரை கடந்த 15.3.2020 அன்று இரவு 5 பேர் பத்திரிகை கொடுப்பது போல் வீட்டுக்கு வந்து நடித்து, கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். மேலும் கொலையாளிகள் ராமநாதன் மனைவி விஜயாவை தாக்கியும், ராமநாதன் வீட்டிலிருந்த நகை […]

கும்பகோணம்

சுவாமிமலை முருகன் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக திகழ்வது சுவாமிமலை முருகன் கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரமோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படும்.அதன்படி இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது. கொடி மரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் வள்ளி – தெய்வானையுடன் எழுந்தருளினர். பின்னர் விநாயகர், சண்டிகேஸ்வரருடன் சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபத்துக்கு எழுந்தருளினர்.சித்திரை பிரமோற்ச விழா துவங்கியதையடுத்து, இன்று முதல் 29-ம் […]

தஞ்சாவூர்

மலேசியாவில் மரண படுக்கையில் உயிருக்கு போராடும் பாபநாசம் பெண்மணி

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, தென்சருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 50), இவரது மனைவி பத்மினி (வயது 43). கடந்த 2 வருடத்திற்க்கு முன்னர் பத்மினி தன் கணவருடன் மலேசியாவில் வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார். கணவர் சந்திரசேகரன் குழந்தைகளை காண வேண்டி பாபநாசத்திற்கு மீண்டும் ஓராண்டுக்கு முன்னர் திரும்பிவிட்டார். தொடர்ந்து பத்மினி மட்டும் மலேசியாவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மினி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜபாதன் […]

தஞ்சாவூர்

பாபநாசம் வடக்கு ஒன்றிய அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

பாபநாசம் வடக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கபிஸ்தலம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கழக துணை பொதுச்செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான, M.ரெங்கசாமி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, இளநீர், தர்பூசணி, வெள்ளரி, குளிர்பானங்களை பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெயராமன், […]