விழுப்புரம்

அகில பாரத இந்து மகா சபா விவசாய அணியின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

செய்திகளை பகிர...

விழுப்புரம் மாவட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா விவசாய அணியின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் அரசுரில் மாநில விவசாய அணி அமைப்பாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பெரு செந்தில் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேசியத் துணைத் தலைவரும் தமிழ் மாநில தலைவருமான டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் இராம.நிரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் விழுப்புரம் மற்றும் கடலூர் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் இருந்து புதிய நிர்வாகிகள் 500 பேர் இந்து மகா சபாவில் மாநில விவசாய அணி அமைப்பாளர் மாணிக்கம் தலைமையில் இணைந்து கொண்டனர். மேலும் மத்திய அரசாங்கம் பசு வளர்ப்பிற்கு பல சலுகைகள் அறிவித்திருக்கிறது அதே போல் தமிழகத்திலும் தமிழக அரசு பசு வளர்ப்பிற்கு பல சலுகைகளை அறிவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Total Page Visits: 210 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *