கும்பகோணம்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

செய்திகளை பகிர...

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் திருநறையூர் ஊராட்சியில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வழியுறுத்தியும், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவித்த தொகையை வழங்க கோரியும், சமையல் எரிவாயுவிற்கு 100 ரூபாய் மானியம் அறிவித்த தொகையை வழங்க கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டல துணை செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலாஜி, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு அவைத்தலைவர்  கலையரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது, ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் பிரபாகரன், கிளை செயலாளர் தாடிபாண்டியன், ஆட்டோகுணா, ரவி, இளைஞர் பாசறை செயலாளர் ராஜீ மற்றும் கழக முன்னோடிகள் கலந்துக்கொண்டனர்.

Total Page Visits: 66 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *