சென்னை

அம்மாவுடனான தனது வாழ்க்கையைப் பற்றி சின்னம்மா ஆங்கில பத்திரிக்கைக்கு சிறப்பு பேட்டி

செய்திகளை பகிர...

அம்மாவுடனான தனது வாழ்க்கையைப் பற்றி The Week ஆங்கில பத்திரிக்கைக்கு சிறப்பு பேட்டி தந்துள்ளார் சின்னம்மா. அதில் சில:-

பெங்களூர் மருத்துவமணையில் சிகிச்சையில் இருந்த போது விரைவில் குணமடைந்து தமிழகத்திற்கு திரும்பவேண்டும் என்பதே எனது எண்ணம்.
“நான் திரும்பி வருவேன், துரோகிகள் அனைவரையும் தோற்கடித்து கட்சியை காப்பாற்றுவேன்” என்று அக்காவின் நினைவிடத்தில் சத்தியம் செய்தேன்.
இப்பொழுதும் அதே எண்ணத்தில் தான் உள்ளேன். எம்ஜிஆரின் உடல் வைக்கப்பட்ட இராணுவ ஊர்தியில் இருந்து அக்கா தள்ளிவிடப்பட்டு காயம் அடைந்தார். வீட்டிற்கு வந்து தனது அம்மாவின் படத்திற்கு முன் விழுந்து நான் தோற்றுவிட்டேன் அம்மா என்று அழுதார். ரொம்ப வருத்தமாக இருந்தது, அக்காவின் மன உளைச்சலையும் புரிந்துக்கொண்டேன். அன்று தான் அவருடனே அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது கணவருடன் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று ஜானகி அம்மாவை சந்தித்து பேசுகிறேன், கட்சியை ஒன்றிணைப்போம் என்று கூறினேன். ஆனால் அக்கா போகவேண்டாம், சந்திப்பதன் மூலம் எதுவும் நடக்க போவதில்லை என்று சொன்னார். ஆனால் நான் பிடிவதமாக இல்லை நான் சென்று பார்க்கிறேன் என்று சொன்னேன். அக்காவோ உங்க விருப்பப்படி செய்ங்க என்று சொல்லிவிட்டு சென்றார். மாலையில் ஜானகி அம்மாவை சந்தித்தோம் பின் அவர் பின்வாங்குவதாக கூறினார், இதை தூர்தர்ஷனுக்கும் கூறினார். நாங்கள் வீட்டிற்கு வந்து அக்காவிடம் நடந்ததை சொன்னோம் பிறகு விரைவிலேயே அக்கா தலைமை பொறுப்பை ஏற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஏன் அரசியலிருந்து விலகுனீர்கள் என்ற கேள்விக்கு, இரட்டைஇலை சின்னத்திற்கு எதிராக நான் எவ்வாறு பிரச்சாரம் செய்ய முடியும்? என்று எதிர்கேள்வி கேட்டார்.
போயஸ்கார்டனில் 33 ஆண்டுகளாக தங்கியிருந்த காலத்தில் ஒருபோதும் அக்காவின் சம்மதம் இல்லாமல் வெளியே சென்றது இல்லை. என்னை வீட்டில் காணவில்லை என்றால் உடனே என்னை தொடர்பு கொண்டு நான் எங்கிருக்கிறேன் என்று கேட்பார்.
அக்காவிற்கு விருப்பமான Garden Vareli புடவைகள் வாங்க மிலன் ஜோதி ஷோரூமிற்கு மட்டுமே அக்கா இல்லாமல் சென்ற இடம். அக்காவிற்கு அடர் பச்சை நிறம் மிகவும் பிடிக்கும், அவருடைய அதிர்ஷ்ட நிறமாக அதை கருதினார்.
ஒவ்வொறு முறையும் ஒரே மாதிரியான இரண்டு புடவைகளை தான் எடுப்போம். அக்கா அணியும் புதிய புடவைகளைப் போல் நானும் அணியவேண்டும் என்று என்னிடம் வலியுறுத்துவார்.
பச்சை நிற புடவைகளை பார்க்கும் பொழுது பழைய நினைவுகள் தான் எனக்குள் வரும். வேர்கடலை, பச்சை பட்டாணி, நீர்கொழுக்கட்டை போன்றவை அக்காவிற்கு பிடித்த ஸ்னாக்ஸ். இதையெல்லாம் நானுமே இப்பொழுது சாப்பிடுவதில்லை.
இரண்டு முறை வெளியேற்றப்பட்டதை பற்றி கூறும் போது, அக்கா ஒரு நிமிடம் கூட நானில்லாமல் இருந்ததில்லை. வெளியேற்றம் வெளியுலகத்திற்கு மட்டும். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வோம். நான் 1997 சிறையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்து மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டேன். இந்த செய்தி அவரை உலுக்கியது. உடனே மருத்துவமணைக்கு வந்து, பொறுமையின்றி விரைவாக என் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
2011 டிசம்பரில் மீண்டும் வெளிவேற்றப்பட்டு 100 நாட்களுக்கு பிறகு மன்னிப்பு கடிதம் (குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் விலகியிருப்பதாக) கொடுத்துவிட்டு மீண்டும் போயஸ்கார்டன் வந்தார். இதைப் பற்றி கேட்டபொழுது…..
அவர் அறிவுறுத்தலின் பேரில் தான்
டி. நகர் இல்லத்தில் இருந்தேன். இவையெல்லாம் திட்டமிடப்பட்டவை தான். அக்கா தினமும் என்னிடம் பேசுவார். அக்காவுடனான தொலைப்பேசி உரையாடல் இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவில் தான் முடியும். அரசியல் பற்றி என்னுடன் பேசுவார். மன்னிப்பு கடிதம் அக்காவின் ஆலோசனை. சோ மற்றும் எதிரான சில அதிகாரிகளின் எண்ணத்தை அறிந்து கொள்ளவே இந்த வெளியேற்றம். போயஸ் கார்டன் திரும்பிய பிறகு ஒவ்வொரு நாளும் என்னுடன் செலவிட்டார்.
சின்ன பிள்ளையை போல் என் மடியில் படுத்துக்கொள்வார்.
அக்கா ஓர் சிறந்த ஆன்மிகவாதி. ஒரு நாளும் பூஜை செய்வதையோ, கடவுளுக்கு நேரம் செலவிடுவதையோ அவர் தவிர்த்தது இல்லை. அப்போலோ மருத்துவமணையில் இருந்த பொழுதுகூட ஐபேடில் சேமிக்கப்பட்ட அனைத்து சுலோகங்களும் நான் படிப்பேன். அவருக்கு எல்லாம் மனப்பாடமாக தெரியும். செப்டம்பர் 22 அன்று நன்றாக தான் இருந்தார். அன்று இரவை பெட்ரூமில் நன்றாகத்தான் பேசிட்டு இருந்தோம். அக்கா வாஷ்ரூம்க்கு சென்றுவிட்டு வெளியே வரும்பொழுது மயக்கம் வருவதாக பீல் பண்ணாங்க. நான் அவங்கள பாத்து வந்த அவங்க என் மேல விழுந்துட்டாங்க. நான் ஒரு கையில் அவங்கள பிடிச்சுட்டே டாக்டர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்தேன். என்னிடம் எப்பொழுதுமே wireless intercom இருக்கும். இதை எப்பொழுதும் நான் என்னுடைய சல்வார் பாக்கட்டில் வெட்சிருப்பேன் அக்காவிற்கு எதாவது என்றால் இதில் அழைப்பார்.
மருத்துவமனையில் நலமாகவே இருந்தார். அடுத்த நாளில் காவிரி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆனால் கடைசியில் எங்களது வேண்டுதல்கள் எதுவும் அவரை மீட்கவில்லை என்று கண்ணீருடன் கூறுகிறார். சின்னம்மா
டிசம்பர் 19 அன்று வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று இருந்தேன். அக்கா கோடநாடு சென்று ஓய்வு எடுக்கலாம் என்றார். நான் வீட்டிற்கு திரும்பி தங்கிவிட்டு செல்லலாம் என்றேன், அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அக்கா என்னைவிட்டு பிரிவார் என்று நான் ஒரு நாளும் நினைத்ததில்லை.
டிசம்பர் 4ம் தேதி அவர் தயிர்சாதம் மட்டுமே எடுத்துக்கொண்டார்.
டாக்டர்கள் சரியான இடைவெளியில் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இரண்டு பன் மற்றும் filter காபி அளிக்கப்பட்டது. அப்போது இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா வேனும்னு சொன்னாங்க. அதை நானே போட்டுக்கொடுத்தேன்.
அப்போ அவங்க சாப்பிட்டு நல்லாதான் இருந்தாங்க டிவி பாத்திட்டு அப்போ, திரும்பி விழுந்தாங்க நான் அக்கா அக்கா என்று கத்துனேன், அப்போ பக்கதுல டாக்டர் ஒருத்தர் தினசரி மருந்துகளை எழுதுக்கொண்டு இருந்தார். உடனே அவர் ஓடிவந்தார்.
அக்கா கண்ண திறக்க முயற்சி பண்ணாங்க ஆனா முடியல உடனே ஐசியுவிற்கு மாற்றப்பட்டார்.
இதை தாண்டி சில விஷயங்களும் சின்னம்மா சொல்லிருக்காங்க.
உண்மையான நட்பின் அடையாளம்.

Total Page Visits: 122 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *