சென்னை

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

செய்திகளை பகிர...

தமிழகத்தில் கூடுதல் தளர்வுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்

தற்போது கடைகள் 7 மணி வரை திறந்து வைக்கப்பட்ட நிலையில் இனி கடைகள் இரவு 8மணி வரை செயல்பட அனுமதி.

ஹோட்டல்களில் 50சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் காலை 6மணி முதல் இரவு 8மணி வரை செயல்படும்.

தேநீர் கடைகளிலும் 50சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் இடையே பயணிக்கும் இ-பதிவு முறையை ரத்து செய்யப்படுகிறது.

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட அனுமதி.

அனைத்து வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு முறையில்
செயல்பட அனுமதி.

அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.

மூன்று வகையான தளர்வுகள் நீக்கப்பட்டு ஒரே மாதிரியான தளர்வுகள் இனி அமலுக்கு வருகிறது.

குளிர்சாதன வசதி இல்லாமல் 50சதவீதம் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திரை அரங்குகள், பூங்காக்கள் கல்லூரிகள், பள்ளிகள், மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுமதி இல்லை.

மாநிலங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் போக்குவரத்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி கடைகள், நகை கடைகள் குளிர்சாதன வசதியின்றி
50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Total Page Visits: 61 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *