மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் தடுப்பூசி முகாம் திறப்பு

செய்திகளை பகிர...

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய பேரிடர் பெருந்தொற்று காலத்தில் நோய் பரவலை தடுக்கும் விதமாக யுவா ஜெயின் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் பிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர் ஜெயின், செயலர் லவ்னீஸ் ஜெயின், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனர் தலைவர் காமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் சரத் சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் யுவா ஜெயின் சங்க சஞ்சய் ஜெயின், லலீத் ஜெயின் சங்க உறுப்பினர்கள், ஆட்சியர் அலுவலக சரவணன், மருத்துவர்கள், வருவாய் துறை, சுகாதார துறை, நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து மயிலாடுதுறை நகர பேருந்து நிலையத்தில் நடமாடும் தடுப்பூசி முகாம் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Total Page Visits: 108 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *