கும்பகோணம்

தாராசுரத்தில் திமுகவினர் வெடி வெடித்து கொண்டாட்டம்

செய்திகளை பகிர...

தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் முக. ஸ்டாலின் பொறுப்பேற்று உள்ளதையடுத்தும், தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றதையும் கொண்டாடும் விதமாக, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் குடந்தை தெற்கு ஒன்றிய செயலாளர் அறிவுறுத்தலின்படி, குடந்தை தெற்கு ஒன்றியம் தாராசுரம் பேரூர் திமுக சார்பில் தாராசுரம் பேரூர் செயலாளர் சாகுல் ஹமீது, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஆகியோர் தலைமையில் தாராசுரம் ரவுண்டானாவில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி அசோகன், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் சேட்டு, சங்கர், மோகன், கலியமூர்த்தி, சண்முகநாதன், ஷாஜகான், செந்தில்குமார், பேரூர் நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தாராசுரத்தில் உள்ள 15 வார்டுகளிலும் குடந்தை தெற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Total Page Visits: 46 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *