கும்பகோணம்

தானியங்கி மின் நுகர்வு அளவை கணக்கிட சாதனம் – அரசு இன்ஜினியரிங் காலேஜ் மாணவர்கள் சாதனை

செய்திகளை பகிர...

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் இறுதியாண்டு கணினி பொறியியல் துறை மாணவர்கள் சுபத்ரா, பிரபா, சபரின்சபா ஆகிய மாணவர்கள் இணைந்து ஆசிரியர் ரேவதி வழிகாட்டுதலோடு ஸ்மார்ட் மின் இணைப்பு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இந்த தானியங்கி அமைப்பானது மனித துணையின்றி வீட்டு மின் நுகர்வு அளவை துல்லியமாக கணக்கிட்டு சம்பந்தப்பட்ட பயனாளரின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கும். ஒவ்வொரு 100 யூனிட் மின் நுகர்வு முடிந்தவுடன் அந்த செய்தியையும் சம்பந்தப்பட்ட நுகர்வோர் கைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்கும். மேலும் எவரேனும் மின் திருட்டில் ஈடுபட்டால் அதனை கண்டுபிடித்து தெரிவித்து விடும். இந்த சாதனத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் கும்பகோணம் வடக்கு செயற்பொறியாளர் குணசீலன், உதவி பொறியாளர் ரஞ்சித் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் முனைவர் பாலமுருகன், துணை முதல்வர் முனைவர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர் ருக்மாங்கதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 42 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *