கும்பகோணம்

சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் விழா

செய்திகளை பகிர...

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சியில் 5000 பேருக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் விழா ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சுந்தரபெருமாள் கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கலாராணி, துணைத் தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ஆனந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 5000 பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சுந்தரபெருமாள் கோவில் வட்டார மருத்துவ ஆய்வாளர் விஜயேந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கவிதா, சுதா, ரேகா, நரசிம்மவர்மன், கோவிந்தன், ராஜகுமாரி, விசாலாட்சி, சுமதி, சுரேஷ், துரைராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சுந்தர பெருமாள் கோவில் ஊராட்சி எழுத்தர் ராமநாதன் நன்றி கூறினார்.

Total Page Visits: 86 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *