கும்பகோணம்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவை முன்கூட்டியே தெரிவிக்கும் கருவி

செய்திகளை பகிர...

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்களான பரத், வினித், பிரேம் கணேஷ், ஆகாஷ் ஆகியோர் இணைந்து பேராசிரியர் தியாகராஜன் வழிகாட்டுதலின்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவை முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கும் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த கருவியானது வெள்ளம் மற்றும் நிலச்சரிவை முன்கூட்டியே துல்லியமாகவும் மிக விரைவாகவும் கண்டறிந்து தகவல் அனுப்பும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை தமிழ்நாடு சிறந்த கட்டிட கலைஞர் விருது பெற்ற கட்டட வடிவமைப்பாளரும், முன்னாள் ரோட்டரி கவர்னருமாகிய வசீகரன் பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவன தலைவர் திருநாவுக்கரசு, ஆலோசகர் கோதண்டபாணி, முதல்வர் முனைவர். பாலமுருகன், துணைமுதல்வர் முனைவர். கலைமணிசண்முகம், கல்விப்புலதலைவர் முனைவர். ருக்மாங்கதன், துறைத்தலைவர் பொறுப்பு சந்திரசேகரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 294 - Today Page Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *