கும்பகோணம்

சுவாமிமலை பேரூராட்சியில் காவல்துறை சார்பில் கலை நிகழ்ச்சி

செய்திகளை பகிர...

சுவாமிமலை காவல்துறை சார்பில் சுவாமிமலை பேரூராட்சியில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுவாமிமலை சின்னக்கடை தெரு மற்றும் பெரிய கடை வீதி ஆகிய பகுதிகளில் நாட்டுப்புற பாடல்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

முகக் கவசம் அணிவது, சோப்பு போட்டு கைகழுவுவது உள்ளிட்டவற்றை பாடல் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சுவாமிமலை காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுவாமிமலை காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், ஸ்ரீதரன், சமூக ஆர்வலர்கள் மன்சூர், மாலிக், முஜிபூர் ரகுமான், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 48 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *