கும்பகோணம்

சுவாமிமலை அருகே சாலை விபத்து – 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

செய்திகளை பகிர...

சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருவலஞ்சுழி ஊராட்சியில் உள்ள அம்மாபேட்டை அருகே கீழே மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராமராஜன் மனைவி சித்ரா (38). இவர் திருவலஞ்சுழி உள்ள தனியார் ஹோட்டலில் வேலை செய்துவிட்டு கடந்த 24ஆம் தேதி மாலை 7.30 மணி அளவில் சாலையைக் கடக்கும் பொழுது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் சென்ற வேன் மோதி சம்பவ இடத்திலேயே சித்ரா இறந்து விட்டார். அவரது உடலை கைப்பற்றி சுவாமிமலை போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் எஸ்.எஸ்.ஐ. ராஜ்குமார், தலைமை காவலர் உமாபதி ஆகியோர் கொண்ட காவல்துறையினர் கும்பகோணம் சாலையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தஞ்சாவூரில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் வேன் மோதி சித்ரா இறந்த வீடியோ காட்சி கிடைத்தது. அதை வைத்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தியதில் தஞ்சாவூர் விளார் கீழத்தெருவை சேர்ந்த ராஜா மகன் டிரைவர் இளந்தமிழன் (49), வேன் டிரைவரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

Total Page Visits: 24 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *