கோயம்புத்தூர்

சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார இருசக்கர வாகனம் கோவை மாணவர்களின் கண்டுபிடிப்பு

செய்திகளை பகிர...

கோயம்புத்தூர் குமரகுரு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து புதுமையான மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை கண்டு பிடித்துள்ளனர்.டீம் “ரிக்” என்ற இயந்திரவியல் பொறியியல் தொழில்நுட்ப மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட மூவர் குழு இதனை செய்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் உள்ள இயந்திரவியல் துறையில் முப்பரிமாண தொழில்நுட்ப வசதிகள் கொண்டு இரு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளனர். இந்த இருசக்கர வாகனத்தின் எடை 40 கிலோ. இந்த வாகனம் சுமார் 25 முதல் 30 கிலோ மீட்டர் வேகம் வரை உச்சமாக போகும். ஒரு முறை இரண்டு மணி நேரத்திற்கு செறிவூட்டினால் 20 கிலோ மீட்டருக்கும் மேல் பயணிக்கலாம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விலை 20,000 மட்டுமே என்கின்றனர். நாள்தோறும் 10 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், மாநகரில் கடைகளுக்கும், கல்லூரி வளாகத்துக்கு உள்ளாகும் பயணிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோரின் தேவையை உணர்ந்து முதற்கட்டமாக வடிவமைத்துள்ள இந்த வாகனம், எதிர்காலத்தில் பல தரப்பிலும் பயன்படுத்தும்படி உருவாக்கப் போவதாகவும், மின்னனு சார்ந்த பல்வேறு வசதிகளை ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் காற்று மாசு உள்ளிட்டவற்றில் இருந்து பொதுமக்களும் இயற்கையும் மீள இந்த வாகனம் நல்ல பயனாக அமையும் என்று தெரிவித்துள்ளனர். சோலார் மூலம் உருவாக்கும் மின்சாரத்தால் இருசக்கர வாகனம் இயக்கம் படும் பொழுது சுற்றுச்சூழலுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று கூறியுள்ளனர்.

Total Page Visits: 218 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *