கும்பகோணம்

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் கொரோனோ குறித்த ஆய்வு கூட்டம்

செய்திகளை பகிர...

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் தஞ்சாவூர் மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் ஹமசந்த்காந்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம் மற்றும் திருவிடைமருதூர், திருபுவனம், ஆடுதுறை, வேப்பத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள், பொதுசுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் நேர்முக உதவியாளர் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வன், மருத்துவர் தேவகுமாரி, வட்டார சுகாதார ஆய்வாளர் ஆசைதம்பி, சுகாதார ஆய்வாளர்கள் ஜோதினாதன், வைத்தியநாதன், கோமதி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 28 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *