கும்பகோணம்

கும்பகோணத்தில் ஹலிமா அறக்கட்டளை சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

செய்திகளை பகிர...

கும்பகோணம் அருகே செட்டி மண்டபம்
ஹலிமா நகர் பள்ளிவாசலில் நோன்பு (இப்தார்) திறக்கும் நிகழ்ச்சி ஹலிமா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ். எம். சாகுல் அமீது தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிக் சோஷியல் வெல்பேர் அசோஸியேஷன் (கிஸ்வா) திட்ட தலைவர் முஹம்மது ஜியாவுதீன், முன்னாள் நிர்வாகிகள் பிர்தௌஸ் கான், ஹாஜி.அஹமது தம்பி, அப்துல் சுபஹான், அக்பர் அலி, சம்சுதீன் முகமது அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிஸ்வா தலைவர் ஜாகிர்உசேன், செயலாளர் சிராஜ்தீன், பொருளாளர் முகமது அஸ்லம், துணைத்தலைவர் யூசுப், துணைச் செயலாளர் பஷீர் அஹமது, மக்கள் தொடர்பு அலுவலர் சையது முபாரக், பேராசிரியர் நஜிபுதீன், ஹலிமா ஜாகிர் உசேன், நிர்வாககுழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 85 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *