கும்பகோணம்

அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய நவீனரக இருசக்கர வாகனம்

செய்திகளை பகிர...

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் இயந்திரவியல் துறையில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் எரிபொருள் செலவையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் எலக்ட்ரிக் பைக் உருவாக்கியுள்ளனர். இக்கல்லூரியின் எந்திரவியல் துறையில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஈஸ்வரமூர்த்தி, அனந்தகிருஷ்ணன், கோகுல்வேல், ஹரிஹரன் ஆகியோர் இணைந்து ஸ்மார்ட் எலக்ட்ரிக் பைக்கை பேராசிரியர் விக்னேஷ் வழிகாட்டுதலின்படி வடிவமைத்துள்ளனர்.

மேலும் கண்டுபிடிப்பு பற்றி மாணவர்கள் கூறியதாவது:- எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எரிபொருளின் செலவு மற்றும் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு நவீன பைக் ஒன்றை வடிவமைத்து உருவாக்கியுள்ளோம். இந்த வாகனம் சோலார் பேனல், பேட்டரிகளுக்கான இன்வெர்ட்டர் உடன் கூடிய டைனமோ ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது. இந்த வாகனமானது 0-100% சார்ஜ் செய்யப்பட்டவுடன் 159 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். மேலும், இந்த வாகனத்தை கொண்டு மணிக்கு 20 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல முடியும்.

இதில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தானாகவே சூரிய கதிர்களை உள்வாங்கி சார்ஜ் செய்து இயங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி அளவு இல்லாத காலங்களில் வேறுவகையில் பேட்டரியை சார்ஜ் செய்ய மோட்டாருடன் டைனமோவை கொண்டு இயங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை உருவாக்குவதற்கான செலவு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மற்ற பைக்குகளை காட்டிலும் குறைவானதே. இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் வாகன போக்குவரத்தில் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
ஜீரோ எரிபொருள் !!! ஜீரோ உமிழ்வு !!! குறைந்த செலவு !!!
இந்த பைக்கின் செயல்பாட்டை கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், காணொளி வாயிலாகவும் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை நேரிலும் பார்வையிட்டு மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியரையும் வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவன தலைவர் திருநாவுக்கரசு, கல்லூரியின் ஆலோசகர் கோதண்டபாணி, கல்லூரியின் முதல்வர் முனைவர். பாலமுருகன், துணை முதல்வர் முனைவர். கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர். ருக்மாங்கதன், இயந்திரவியல் துறை தலைவர் சுந்தர செல்வன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 49 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *