கும்பகோணம்

கும்பகோணத்தில் அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செய்திகளை பகிர...

கும்பகோணம் பெருநகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பெருநகர கழக செயலாளர் எஸ். குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளரும் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம். ரெங்கசாமி கலந்து கொண்டு பேட்டை தெரு, தாலுகா காவல் நிலையம், மொட்டைக்கோபுரம், உச்சிப்பிள்ளையார் கோவில், செல்வம் தியேட்டர் ஆகிய ஐந்துக்கு மேற்பட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து வெள்ளரிப்பிஞ்சு, குளிர்பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரிவு செயலாளர்கள் பெருசு ராமமூர்த்தி, சாமிநாதன், வக்கீல் சுரேஷ், எஸ்.எஸ்.ராஜீ, லதா, கழக பொறியாளர் அணி நிர்வாகி பிரகதீஸ்வரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் கோபால், கும்பகோணம் நகர இணைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் அம்மா கார்த்திக், நகர துணை செயலாளர் தர்மா, நகர பிரிவு நிர்வாகிகள் யூனியன் ராஜா, மதியரசன், சேதுராமன், ஐயப்பன் நகர் ராஜா, நஜிமுதீன், சரவணன் உள்பட கலந்து கொண்டனர்.

Total Page Visits: 142 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *