தஞ்சாவூர்

பாபநாசம் வடக்கு ஒன்றிய அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செய்திகளை பகிர...

பாபநாசம் வடக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கபிஸ்தலம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கழக துணை பொதுச்செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான, M.ரெங்கசாமி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, இளநீர், தர்பூசணி, வெள்ளரி, குளிர்பானங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், பாபநாசம் நகர செயலாளர் பிரேம்நாத் பைரன், மாவட்ட பிரிவு செயலாளர்கள் ஆனந்தி, திவாகரன், ஒன்றிய பொருளாளர் ராமநாதன், ஒன்றிய இணைச் செயலாளர் இராமலிங்கம், ஒன்றிய அவைத்தலைவர் தாஜூதீன், ஒன்றிய பேரவை செயலாளர் செந்தமிழன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கலைமதி, ஊராட்சி கழக செயலாளர்கள் மணிவண்ணன், கோவி. மனோகரன், அழகிரிசாமி, நிர்வாகி சிவகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 73 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *