தஞ்சாவூர்

தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட தேசிய உடைமை ஆக்கப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் பணம் ஒப்படைப்பு

செய்திகளை பகிர...

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது பறக்கும் படை அதிகாரி செல்வகுமாரி தலைமையில் பூண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர் . தேசிய உடைமை ஆக்கப்பட்ட வங்கி மூலம் ரூ 2 கோடியே 50 லட்சம் எடுத்து சென்றது தெரிய வந்தது. அப்போது உரிய ஆவண ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரி அந்த வாகனத்தை பாபநாசம் தேர்தல் நடத்தும் அலுவலர் மதியழகன், வட்டாட்சியர் முருகவேல் ஆகியோரிடம் ஒப்படைத்து இருந்தனர் . இந்நிலையில் தற்போது தேர்தல் முடிந்ததால் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராவ் அவர்களின் உத்தரவின்பேரில் உரிய ஆவணங்களை காண்பித்து பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் சார் நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த ரூ 2 கோடியே 50 லட்சம் ரொக்கப் பணத்தை வட்டாட்சியர் முருகவேல் முன்னிலையில் தேசிய உடைமை ஆக்கப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Total Page Visits: 30 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *