மயிலாடுதுறை

ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

செய்திகளை பகிர...

மயிலாடுதுறையில் உள்ள குருமூர்த்தி நடுநிலைப்பள்ளியில் இருதயம் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கான இலவச சிறப்பு முகாம், மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் ரேலா மருத்துவமனை சார்பில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் சிவபாலன், பொருளர் ஜிவி மனோகரன், செயலர் கந்தன், செல்வகுமார், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனர் தலைவர் காமேஷ், முன்னாள் உதவி ஆளுநர் வைத்தியநாதன், சுந்தரமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் வளவன், முருகையன், டாக்டர் ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் மஞ்சள் காமாலை, வயிறு உப்புசம், கல்லீரல் வீக்கம், குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள், தலைச்சுற்றல், குமட்டல், கல்லீரல் மற்றும் கணையப் புற்றுநோய், ஹெபாடைடிஸ் பி/ஹெபாடைடிஸ் சி வைரஸ், பிற கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் உட்பட இ.சி.ஜி, எக்கோ, பரிசோதனைகளை இலவசமாக 150க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். 20 நபர்களுக்கு இருதய குறைபாடுகள் உள்ளது கண்டறியப்பட்டு அவர்கள் தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டார்கள். முகாமில் மருத்துவர்கள் தீபக், அசோக் உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள், சி.சி.சி. சழுதாய கல்லூரி நர்சிங் மாணவிகள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Total Page Visits: 114 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *