சென்னை

சிவசேனா கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

செய்திகளை பகிர...

சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சென்னை மேற்கு தாம்பரத்தில் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தர்ஷன் நண்டுல்கர், மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் சுந்தரவடிவேலன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ராஜன், மாநில அமைப்பாளர் பாலாஜி, மாநில துணைத் தலைவர் செந்தில் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மாநில செயலாளர்கள் முரளி மோகன், சரவணன், முனீஸ்வரன், மாநில துணைத்தலைவர் நாகையா, மாநில துணைச் செயலாளர்கள் ராஜேஷ், இளைஞரணி செயலாளர் சிங்கார வடிவேலன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமைப்பாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

Total Page Visits: 166 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *