சென்னை

சின்னம்மா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப் போவதை இனி யாராலும் தடுக்க முடியாது – டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளேடு கருத்து

செய்திகளை பகிர...

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ் சின்னம்மா தலைமையில் அதிமுக கட்சியை மீட்டெடுக்க போவதை யாராலும் தடுக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது. மேலும், எத்தனை தீயசக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் திட்டங்கள் தீட்டினாலும் அவை புஸ்வாணம் ஆகிவிடும் என்றும், பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி, சரணாகதி அடைந்து நிற்பதும், பதவி கிடைத்து விட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும். சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமர வைத்த தியாகத் தலைவிக்கு காட்டும் விசுவாசும் இது தானா? சின்னம்மாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்று, நன்றி கெட்ட மனிதராக வலம் வருபவர்கள் சரித்திரத்தில் நம்பிக்கை துரோகிகள், பச்சோந்திகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

Total Page Visits: 153 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *