கோயம்புத்தூர்

கோவையில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா – மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

செய்திகளை பகிர...

கோவை சுங்கம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி உள்ளது எனவும், கூட்டணிக்குள் முரண்பாடுகள் வருவது சகஜமானது எனவும் கூறினார். மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக தெளிவாக உள்ளது. புதிய கல்வி கொள்கையை எல்லா மாநிலங்களும் ஏற்க ஆரம்பித்துள்ளார்கள் எனவும், தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை தொடருமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பது அவரது கருத்து எனவும், தமிழக மக்களும் மும்மொழி கொள்கை வேண்டுமென நினைக்கின்றனர் என கூறினார். பெரியார் தவிர்க்க முடியாத தலைவர் எனவும், அவரது பல கொள்கைகளை ஏற்க மாட்டோம் எனவும், மக்களுக்காக பாடுபட்ட பெரியாரின் சில கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார். மாணவர்கள் மூன்று மொழி படிப்பதால் அறிவுத்திறன் அதிகரிக்கும் எனவும், இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துர்திஷ்டவசமானது எனவும், நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டது. நீட் விவகாரத்தை அரசியல் தலைவர்கள் அரசியலாக்குகிறார்கள். நடிகர் சூர்யா நல்ல மனிதர். சூரியாவின் நீட் தேர்வு குறித்த அறிக்கை லட்சண ரேகையை தாண்டும் வகையில் இருந்தது. நடிகர் சூரியா கேள்விக்கான விடையை 2020 நீட் ரிசல்ட் தரும் எனவும், நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின்னர் நடிகர் சூரியா நீட் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது வரவேற்பிற்கு உரியது, சமூக வலைதளங்களில் அநாகரீகமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Total Page Visits: 63 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *