கும்பகோணம்

கும்பகோணத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

செய்திகளை பகிர...

கும்பகோணத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடனே வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடுகள் காலத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பணி உயர்வை 20 சதவீத விழுக்காட்டில் இருந்து 30% உயர்த்தி வழங்க வேண்டும். கிராம உதவியாளர் பணி நியமனத்தை தேர்வு ஆணையத்தின் டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வட்டார தலைவர் மணிமாறன் தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார ஆலோசகர் ஜோதி, வட்டாரச் செயலாளர் குமார், ராஜேஷ் கண்ணா, துரைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 104 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *