திண்டுக்கல்

தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

செய்திகளை பகிர...

தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். கூட்டத்திற்கு மாவட்ட கௌரவத் தலைவர் நல்லகாசிராஜன் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முரளிதரன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொண்டு சங்க அடையாள அட்டை, ஆண்டுச்சந்தா, நலவாரிய பதிவு மற்றும் தலைமை சங்கத்தால் ஓவியர்களுக்காக எடுக்கப்பட்ட வேலை விபரம் குறித்தும் பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் பாண்டித்துரை நன்றி தெரிவித்தார்.

Total Page Visits: 146 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *