கும்பகோணம்

கோவில் வளாகத்தில் தேங்கியிருந்த மழை நீர் தொடர்ந்து வெளியேற்றம்

செய்திகளை பகிர...

தாராசுரம் பேரூராட்சியில் உலகப் புகழ்பெற்ற ஐராவதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கும்பகோணம் பகுதியில் இரண்டு தினங்களாக பெய்த மழையினாலும், திருக்குளத்திலிருந்து வரும் ஊற்று நீராலும் கோவிலில் அமைந்துள்ள நந்தியின் பிரகாரத்தை சுற்றி நீர் தேங்கியது. இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி, அம்மன் சன்னதி, நந்தி மண்டபம் மற்றும் அகழிகள் ஆகியவற்றில் சேகரமாகியுள்ள மழைநீரை 2 ஆயில் எஞ்சின், 1 நீர்மூழ்கி மோட்டாரைக் கொண்டு இறைக்கப்படுவதை, தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் நேரில் பார்வையிட்டார். பேரூராட்சி செயல் அலுவலர்கள் தாராசுரம் அண்ணாதுரை, சுவாமிமலை இராஜதுரை ஆகியோர் உடனிருந்தார்கள்.

Total Page Visits: 97 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *