கும்பகோணம்

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செய்திகளை பகிர...

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 3 வேளாண் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், நிவர் மற்றும் புரவி புயல் மழை வெள்ளத்தால் பாதித்த விவசாய நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், டில்லியில் 15 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் காந்தி பூங்கா அருகே விவசாய தொழிலாளர் இயக்க மாநில துணைச்செயலாளர் நாகப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் பாலகுரு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தமிழ்வளவன், மண்டல செயலாளர் விவேகானந்தன், மாநில பொருளாளர் வெண்மணி, இளைஞரணி மாநில செயலாளர் தமிழினி, மாவட்ட பொறுப்பாளர் உரவழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழருவி, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் முல்லை வளவன், சந்திரசேகர், பாலசுப்ரமணியன், பாபநாசம் தொகுதி செயலாளர் தமிழன், தொண்டர் அணி மாவட்ட துணை செயலாளர் செல்வம், வழக்கறிஞர் அணி மாநில பொறுப்பாளர் நந்தவனம் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 85 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *