கும்பகோணம்

கும்பகோணம் நகர அதிமுக சார்பில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் பூத் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

செய்திகளை பகிர...

கும்பகோணம் நகர அதிமுக சார்பில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் பூத் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் கும்பகோணம் நகர கழக அவைத்தலைவர் குடிசை கோவிந்தராஜ் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் நகர மகளிர் அணி செயலாளர் பூமொழி வரவேற்றார். இந்த கூட்டத்திற்கு மாவட்ட பிரிவு நிர்வாகிகள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, சின்னையன், மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் நகர அதிமுக செயலாளரும் KMBF தலைவருமான ராம. ராமநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


இந்த கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் வெற்றி குறித்தும்,கும்பகோணம் நகராட்சி 45 வார்டுகளிலும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் பூத் அமைப்பது குறித்தும், எதிர் வரும் டிசம்பர் 5ம் தேதி புரட்சிதலைவி அம்மா நினைவு நாள் அனுசரிக்க கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தல் உள்பட மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அனைவருக்கும் வட்டச்செயலாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.

Total Page Visits: 163 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *