திருவாரூர்

மன்னார்குடியில் அமமுக சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான கருத்து கேட்பு கூட்டம்

செய்திகளை பகிர...

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆணைக்கிணங்க 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் காமராஜ், கழக அமைப்புச் செயலாளரும் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான மகேந்திரன், கழக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முத்தையா, விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாலசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் பொன்.த. மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 54 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *