திருவண்ணாமலை

திருவண்ணாமலை திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா

செய்திகளை பகிர...

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது பத்து நாட்கள் நடைபெற்று வந்த விழாவின் 10 வது நாள் திருவிழா நவம்பர் 29 அன்று அதிகாலை சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அதிகாலை ஆலயத்தின் கருவரை முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன் அனேகன் என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து 5 மடக்கிற்கு தீபம் ஏற்றப்பட்டது. வைகுந்த வாயில் வழியாக மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள உண்ணாமுலை அம்மனுக்கு ஆராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் உள்ள விநாயகர் முருகர் ஆகியோருக்கு ஆராதனை காட்டப்பட்டு மீண்டும் திருக்கோயிலின் மூல ஸ்தானத்தில் ஆராதனை காட்டப்பட்டது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தீப தரிசனத்தைக் கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சி, கோயில் இணையதளம், உள்ளூர் சேனல்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்து சமய அறநிலையத் துறையும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பரணி தீபத்தை தொடர்ந்து இன்று மாலை 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான கொப்பரை மற்றும் 3 ஆயிரத்து 500 கிலோ நெய், 1000 மீட்டர் காடாத் துணி உள்ளிட்டவை மலை உச்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Total Page Visits: 171 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *