BRAKING NEWS சென்னை

நிவா் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம்

செய்திகளை பகிர...

நிவர் புயல் எதிரொலியாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் விமான நிலைய ஓடுபாதை தளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தன. இதனால் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நிவர் புயல் இன்று புதன் இரவிலிருந்து நாளை காலை வரை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. புயலின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்பதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று புதன் இரவு 7மணி முதல் நாளை காலை 7 மணி வரை விமான சேவையை நிறுத்துவதாக சென்னை விமான நிலைய ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Total Page Visits: 103 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *