கடலூர்

கடலூரில் அனைத்து துறை அதிகாரிகளோடு ஆய்வு – கடலூர் சிறப்பு கண்காணிப்பாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

செய்திகளை பகிர...

கடலூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமுறி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த கடலூர் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில் மாவட்டத்தை முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்க கூடாது என்பதற்காக ஒரு வாரத்திற்குத் தேவையான ரேஷன் பொருட்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளதாகவும், கூடுதலாக இருப்பு தேவைப்படும் பட்சத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வரவைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30-ஆம் தேதி வரை காலம் உள்ளது‌. நாளைக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு சரி செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தினார். நிவர் புயல் காரணமாக மின் கம்பங்கள் சேதம் அடையும் பட்சத்தில் ஈரோடு, கோயம்புத்தூர், திருவள்ளூர் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து பாதிப்புகளை சரிசெய்ய பணியாளர்கள் மற்றும் வீரர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஜேசிபி இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவம் மற்றும் கால்நடை துறையினர் இரவு நேரத்திலும் பணி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

Total Page Visits: 67 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *