BRAKING NEWS

நிவர் புயல் காரணமாக ரயில் சேவை நிறுத்தம்

செய்திகளை பகிர...

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 6 விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 9 விரைவு ரயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருச்சி – சென்னை இடையிலான ரயில்கள், தஞ்சை – சென்னை, சென்னை – தஞ்சை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மைசூர் – மயிலாடுதுறை ரயில் சேவை நவம்பர் 24ஆம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது. மயிலாடுதுறை – மைசூர் ரயில் சேவை நவம்பர் 25ஆம் தேதி திருச்சியில் நிறுத்தப்படுகிறது. எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு ரயில் சேவை நவம்பர் 24ஆம் தேதி திருச்சியில் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Total Page Visits: 91 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *