கடலூர்

சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு கைது

செய்திகளை பகிர...

இந்து தர்மம் (மனு தர்மம்) பெண்கள் அனைவரையும் விபச்சாரிகளாக பாவிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அதனையடுத்து திருமாவளவனுக்கு எதிராக டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்து மதம் மீது எப்போதும் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்ற பரப்புரையை பாஜக செய்து வருகிறது. சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்ய பாரதிய ஜனதா கட்சியினர் வாகனத்தில் கிளம்பினர். அவர்கள் அனைவரையும் கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு அருகே ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு மற்றும் மூன்று நபர்களை கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Total Page Visits: 68 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *