சென்னை

சின்னம்மா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை – வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

செய்திகளை பகிர...

சின்னம்மா இன்னும் ஒரு வாரத்தில் வெளி வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார். கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறைக் கைதிகளை நன்னடத்தையின் படி அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். எனவே சின்னம்மா 43 மாத காலம் சிறை வாசத்தை முடித்து உள்ள நிலையில், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் ஒரு வாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

Total Page Visits: 116 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *