Uncategorized

விவசாய மேலாண்மையில் நவீன தொழில்நுட்பம்-அரசு இன்ஜினியரிங் காலேஜ் மாணவர்களின் புதிய சாதனை

செய்திகளை பகிர...

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் ஹிர்த்திக் ஸ்ரீராம், அம்சத் கான், முகமது அலி ஜின்னா, கோவிந்தன் ஆகிய மாணவர்கள் இணைந்து துறை தலைவி கவிதா வழிகாட்டுதலின் அடிப்படையில் விளை நிலங்களில் ஏற்படும் நீர் தட்டுப்பாடு மற்றும் பயிர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை கண்டறியும் அதிநவீன தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு தேவையான நீர்ப்பாசன வசதி, உரம், pH, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்ட பயிர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தங்களது அலைபேசி உதவியுடன் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வயல் நிலங்களில் நீர் தட்டுப்பாடு மற்றும் நீர் தேவையை தானே அறிந்து பூர்த்தி செய்வதால் விவசாயிகள் நேரில் சென்று ஆய்வு செய்யும் நேரமும் அலைச்சலும் குறைகிறது. மேலும் முக்கிய அம்சமாக தேவைக்கு அதிகமான நீர் வயல்களில் தேங்காமல் மறுசுழற்சி மூலம் மீண்டும் வயல்களில் பாயும் படி இக்கருவி செயல்படுகிறது. விவசாயிகள் வீட்டிலிருந்தே தங்களது வேளாண்மையை மேற்கொள்வதன் மூலம் கொரோனா பேரிடர் காலங்களிலும் விவசாயிகள் ஈடுபட இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. இந்தத் நவீன தொழில்நுட்பத்தை வேளாண்மை துறை துணை செயற்பொறியாளர் (பொறுப்பு) ஐயப்பன் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு, ஆலோசகர் பேராசிரியர் கோதண்டபாணி, முதல்வர் முனைவர் பாலமுருகன், துணை முதல்வர் முனைவர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர் ருக்மாங்கதன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 269 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *