மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கொரோனா நோய் தடுப்பு மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி

செய்திகளை பகிர...

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுறுத்தலின் படி நடைபெற்ற கொரோனா நோய் தடுப்பு மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார் பேரணிக்கு தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சிசிசி. சமுதாயக் கல்லூரி நிறுவனர் காமேஷ், செயலர் லட்சுமிபிரபா, தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற நேரு யுவகேந்திரா தன்னார்வலர்களுடன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு துறை முன்னணி தீயணைப்பு வீரர் மணிமாறன், நிலைய போக்குவரத்து அலுவலர் ரவி, எழுத்தர் நாடிமுத்து, தீயணைப்பு வீரர்கள் ஐயப்பன், சிவகுமார், சரவணன், ஓட்டுநர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது.

Total Page Visits: 111 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *