காரைக்கால்

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாரில் பந்தக்கால் முகூர்த்தம்

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டு அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. எதிர் வரும் டிசம்பர் மாதம் 27-ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார். அதனை முன்னிட்டு ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனை செய்யப்படும். சனிப்பெயர்ச்சி விழா தொடங்குவதற்கான பூர்வாங்கப் பணிகளின் […]