BRAKING NEWS

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை விரிவாக்கம்: 43 புதிய மந்திரிகள் பதவியேற்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய மந்திரிசபையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக மத்திய மந்திரிசபை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதன்படி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட மந்திரிசபையில் 43 பேர் இடம்பெற்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 43 புதிய மத்திய மந்திரிகளுக்கு […]

BRAKING NEWS

பிரதமர் மோடி – மு.க. ஸ்டாலின் சந்திப்பு

தமிழ்நாடு முதல்வரான பிறகு முதன்முறையாக பிரதமரை சந்தித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு:- பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வை ரத்து செய்தல், 3 வேளாண் திட்டங்களை திரும்ப பெற வேண்டும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்துக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். செங்கல்பட்டு, உதகையில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதற்கு அனுமதியை ரத்து […]

BRAKING NEWS கும்பகோணம்

பட்டீஸ்வரத்தில் 25 பேருக்கு கொரோனா

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அடுத்த கொட்டிய படுகை என்ற கிராமத்தில் ஒரே தெருவில் உள்ள 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 25 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BRAKING NEWS

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து மீண்டும் இயக்கப்படும்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த நவம்பர் 24 மதியம் 1 மணி முதல் அரசு பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது புயல் கரையை கடந்து விட்டதால் மேற்கூறிய மாவட்டங்களில் அக்டோபர் 26 மதியம் 12 மணி முதல் வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BRAKING NEWS சென்னை

நிவா் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம்

நிவர் புயல் எதிரொலியாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் விமான நிலைய ஓடுபாதை தளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தன. இதனால் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நிவர் புயல் இன்று புதன் இரவிலிருந்து நாளை காலை வரை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என இந்திய […]

BRAKING NEWS கும்பகோணம்

கும்பகோணம் கோட்டம் பகுதிகளில் நிவர் புயலுக்கான பேரிடர் மீட்புக் குழு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

கும்பகோணம் கோட்டம் பகுதிகளில் நிவர் புயலுக்கான பேரிடர் மீட்புக் குழு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8838956740 திருவிடைமருதூர் நாச்சியார் கோவில் முருக்கங்குடி பகுதி பேரிடர் மீட்புக் குழு அலுவலர் 8608677216 கும்பகோணம் பகுதி பேரிடர் மீட்புக்குழு அலுவலர் 9445086466 கும்பகோணம் தீயணைப்பு துறை பேரிடர் மீட்புக் குழு அலுவலர் 9499055106 மின்சாரத்துறை பேரிடர் மீட்புக்குழு அலுவலர் இவை அனைத்தும் தற்காலிக தொலைபேசி எண்கள் ஆகும். நிவர் புயல் பேரிடர்க்கு மட்டும் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

BRAKING NEWS

நிவர் புயல் காரணமாக ரயில் சேவை நிறுத்தம்

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 6 விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 9 விரைவு ரயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருச்சி – சென்னை இடையிலான ரயில்கள், தஞ்சை – சென்னை, சென்னை – தஞ்சை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மைசூர் – மயிலாடுதுறை ரயில் சேவை நவம்பர் 24ஆம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது. மயிலாடுதுறை – மைசூர் ரயில் சேவை நவம்பர் 25ஆம் தேதி திருச்சியில் […]

BRAKING NEWS

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

“நிவர்” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 24 அன்று மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும், அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.