மயிலாடுதுறை

ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

மயிலாடுதுறையில் உள்ள குருமூர்த்தி நடுநிலைப்பள்ளியில் இருதயம் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கான இலவச சிறப்பு முகாம், மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் ரேலா மருத்துவமனை சார்பில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் சிவபாலன், பொருளர் ஜிவி மனோகரன், செயலர் கந்தன், செல்வகுமார், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனர் தலைவர் காமேஷ், முன்னாள் உதவி ஆளுநர் வைத்தியநாதன், சுந்தரமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் வளவன், முருகையன், டாக்டர் ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். […]

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கொரோனா நோய் தடுப்பு மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுறுத்தலின் படி நடைபெற்ற கொரோனா நோய் தடுப்பு மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார் பேரணிக்கு தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சிசிசி. சமுதாயக் கல்லூரி நிறுவனர் காமேஷ், செயலர் லட்சுமிபிரபா, தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற நேரு யுவகேந்திரா தன்னார்வலர்களுடன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு துறை முன்னணி […]