கும்பகோணம்

கடிச்சம்பாடியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே கடிச்சம்பாடி ஊராட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட மகளிரணி தலைவியும் கடிச்சம்பாடி ஊராட்சி மன்றத் தலைவருமான மலர்கொடி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் திருநறையூர் ஊராட்சியில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வழியுறுத்தியும், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவித்த தொகையை வழங்க கோரியும், சமையல் எரிவாயுவிற்கு 100 ரூபாய் மானியம் அறிவித்த தொகையை வழங்க கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டல துணை செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலாஜி, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் […]

கும்பகோணம்

சுவாமிமலையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சியில் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் தலைமை கழகம் ஆணைக்கிணங்க திமுக அரசை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் NRVS. செந்தில் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராம்குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அழகு.த.சின்னையன், சுவாமிமலை பேரூர் செயலாளர் ரங்கராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ஜாபர் அலி, சுவாமிமலை பேரூர் கழக நிர்வாகிகள் சபீர்அலி, கல்யாணகுமார், ரவிச்சந்திரன், சங்கர், செந்தில், […]

கும்பகோணம்

கும்பகோணம் நிதி நிறுவன மோசடி புகாரில் மேலும் இருவர் கைது

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் நடத்திய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாக தொகை வழங்கப்படும் என கூறியதால் கும்பகோணத்தில் உள்ள தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக யாருக்கும் முதிர்வு தொகை கொடுக்கவில்லை. இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா – பைரோஜ்பானு தம்பதியினர் தங்களுக்கு முதலீடு செய்த ரூ.15 கோடியை தராமல் ஏமாற்றியதாக காவல் […]

கும்பகோணம்

கும்பகோணத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம், பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க சார்பில் மாவட்ட செயலாளர் விஜயராஜ் தலைமையில் நடைப்பெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கவேண்டும், 5ஜி சேவையை துவங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஜூன் மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், இனி வரும் வாரங்களில் மாதந்தோறும் கடைசி நாளன்று ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு பிஎஸ்என்எல் ஆர்டிக் பைபர் மற்றும் டவர்களை […]

கும்பகோணம்

திருப்பனந்தாளில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பனந்தாள் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்பியுமான ஆர்.கே பாரதிமோகன் தலைமையில் திருப்பனந்தாள் கடைவீதியில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்

அதிமுக சார்பில் நாககுடியில் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நாககுடி அதிமுக கிளை சார்பில், தஞ்சை வடக்கு மாவட்ட கழக பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏ மான ராம்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகங்குடி கிளை செயலாளர் நாககுடி சேகர், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் துரைராஜ், வெள்ளைச்சாமி, ஆட்டோ ரமேஷ், சக்திவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலகுரு, சங்கர் மற்றும் அதிமுகவினர் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தனது வீட்டு முன்பு கோரிக்கை முழக்கத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் அறிவொளி, ஒன்றிய கவுன்சிலர் சசிகலா அறிவொளி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்

கும்பகோணத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணத்தில் தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச்சங்கம் மற்றும் ரெட்கிராஸ் சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் நினைவு தின நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ரோசாரியோ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் நிர்வாகிகள் பெஞ்சமின், சிவா, தமிழ்நாடு கார் வியாபாரிகள் சங்க மாநில நிர்வாகிகள் விஜி, ஜேம்ஸ் பிரசாத், சண்முகநாதன், சமூக ஆர்வலர் முனைவர் முத்து பாரதி மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் […]

கும்பகோணம்

நாதன்கோவிலில் திரு பவித்ரோற்சவம் தீர்த்தவாரி

கும்பகோணம் அருகே நாதன் கோவில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் திரு பவித்ரோற்சவம் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையடுத்து பெருமாள் உள் பிரகாரத்தில் புறப்பாடு மற்றும் பஞ்ஜ சூக்த ஹோமங்கள், திவ்விய பிரபந்த சேவை சாற்றுமறை நான்கு நாட்கள் நடைபெற்றது.