திருச்சி

திருச்சியில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விழா

திருச்சியில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு அங்கீகார சான்றிதழை கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தொழில்துறை அமைச்சர் சம்பத், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் ஆகியோர் பள்ளி முதல்வர் அம்பிகாபதியிடம் வழங்கினார்கள்.

திருச்சி

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு உதவி எண்கள் அறிமுகம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் திருச்சி சரக காவல்துறை மற்றும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து கேடயம் என்ற சிறப்பு உதவி எண்களை மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திட்டமானது திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இம்மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் […]