திருவாரூர்

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் வருகை தந்தார். அப்போது மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வர் ஆய்வு செய்தார். அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் கொள்முதல் மற்றும் சாகுபடி குறித்து முதல்வர் கேட்டறிந்தார். பின்னர் திருவாரூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டூரில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவாரூர் சன்னதி […]

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட புதிய ஆட்சியர் பதவியேற்பு

திருவாரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள காயத்ரி கிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதவியேற்றார்.

ஆன்மீகம் கும்பகோணம்

கண்ணாடி வளையலுக்கு ஆசைப்பட்டு சமயபுரத்தை விட்டு நாச்சியார்கோவிலுக்கு வந்த மாரியம்மன் சரித்திரம்

வைகாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் வெள்ளிக்கிழமை விழாவுக்காக அம்மனின் உருவம் செய்து வழிபடுகிறார்கள். மல்லிகை மலர்களுக்கும் கண்ணாடி வளையல்களுக்குமாக, ஆண்டுதோறும் திருநறையூருக்கு சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக வந்து பதிமூன்று நாட்கள் தங்கிவிட்டு திரும்பிச் செல்லும் சமயபுரத்தாளுக்கு, விழாவின்போது பக்தர்கள் மல்லிகை மலர்களையும் வளையல்களையும் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறார்கள். இந்தத் திருவிழாவின்போது, திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கிய வேண்டுபவர்கள், குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சியை விரும்பும் தம்பதிகள் எல்லோரும் ஆகாச மாரியம்மனைப் பிரார்த்தனை செய்து வளையல்கள் சாற்றுவார்கள். இந்துக்கள் மட்டுமல்ல, […]

திருவாரூர்

மன்னார்குடியில் புரவி புயல் நிவாரண உதவி

மன்னார்குடி நகரத்தில் நடுவானியர் தெருவில் வசிக்கும் பாலாஜி என்பவரது வீடு கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர செயலாளர் ஆனந்தராஜ், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கர், மன்னார்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவாரூர்

மன்னார்குடியில் அமமுக சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான கருத்து கேட்பு கூட்டம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆணைக்கிணங்க 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் காமராஜ், கழக அமைப்புச் செயலாளரும் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான மகேந்திரன், கழக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முத்தையா, விழுப்புரம் தெற்கு மாவட்ட […]

ஆன்மீகம்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

திருமூலர் – சிதம்பரம். போகர் – பழனி என்கிற ஆவினன்குடி. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர். கொங்கணர் – திருப்பதி, திருமலை மச்சமுனி – திருப்பரங்குன்றம், திருவானைக்கால் வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் – மதுரை. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம். அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். தேரையர் – தோரணமலை (மலையாள நாடு) கோரக்கர் – பேரூர். பாம்பாட்டி சித்தர் – மருதமலை, […]

திருவாரூர்

வலங்கைமான் கோவில் நவராத்திரி விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழாவின் பதினோராம் நாளை முன்னிட்டு அம்பாளுக்கு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவாரூர்

வலங்கைமான் கோவில் நவராத்திரி விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழாவின் பத்தாம் நாளை முன்னிட்டு அக்டோபர் 26 அன்று அம்பாள் “குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில்” பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவாரூர்

வலங்கைமான் கோவில் நவராத்திரி விழா

வலங்கைமான் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா ஒன்பதாம் நாளான அக்டோபர் 25ம் நாளான அன்று ஶ்ரீ அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

திருவாரூர்

கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூரில் தமிழகத்திலேயே சரஸ்வதி அம்மனுக்கான தனிக்கோயில் அமைந்துள்ளது. சரஸ்வதி பூஜையை ஒட்டி சரஸ்வதி அம்மனுக்கு வெண்பட்டு அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வெண்தாமரை, நோட்டு, புத்தகம், பேனா ஆகியவற்றை வைத்து வணங்கி சிறப்பு வழிபாடு நடத்தினர்.