சேலம்

தமிழக அரசின் சார்பில் புகைப்பட கலைஞரின் குடும்பத்திற்கு நிதியுதவி

சேலம் மாவட்டத்தின் ஜூனியர் விகடன் வார பத்திரிக்கையில் புகைப்பட கலைஞர் விஜயகுமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனையடுத்து தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் படி அமைச்சர் செந்தில்பாலாஜி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி இரண்டு லட்சம் நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், திமுக மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.