மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருமானம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு கட்டணம் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 40 லட்சத்து 86 ஆயிரத்து 507 பேர் தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் கோவிலுக்கு சுமார் 30 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பதன் மூலமாக கோவிலுக்கு வருமானமாக 4 கோடியே 55 லட்சத்து 67 ஆயிரத்து 635 ரூபாய் வசூலாகி உள்ளது.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா – பக்தர்களுக்கு அனுமதி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா அக்.17 முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த நாட்களில் நடக்கும் அம்மனின் அலங்காரங்களை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. நவராத்திரி நாட்களில் தினமும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையும் மாலை 6.45 முதல் இரவு வரை 8 மணி வரையும் பக்தர்கள் மூலஸ்தான அம்மனை தரிசிக்கலாம். […]