திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நடிகர் கமலஹாசன் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திண்டுக்கல் தென் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓம்குமார் அறிவுறுத்தலின்படி, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பூரண நலம் பெற வேண்டி, திண்டுக்கல் பேரூந்து நிலையம் அருகில் உள்ள தட்ஷிணாமூர்த்தி ஆலயத்தில் சிறப்பு பூஜையும், அன்னதான நிகச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் தென் மேற்கு மாவட்ட செயலாளர் சிவசக்திவேல், திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டாலின், மேற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் ஜெகநாதன், ராஜபாண்டி, முத்துச்சாமி, பீர்சேட், அலெக்ஸ், பிரகாஷ், ராஜ்குமார், […]

திண்டுக்கல்

தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். கூட்டத்திற்கு மாவட்ட கௌரவத் தலைவர் நல்லகாசிராஜன் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முரளிதரன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொண்டு சங்க அடையாள அட்டை, ஆண்டுச்சந்தா, நலவாரிய பதிவு மற்றும் தலைமை சங்கத்தால் ஓவியர்களுக்காக எடுக்கப்பட்ட வேலை விபரம் குறித்தும் […]

திண்டுக்கல்

மக்கள் நீதி மையம் கட்சி யின் திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் நியமனம்

மக்கள் நீதி மையம் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளராக திண்டுக்கல் ஸ்டாலினை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நியமனம் செய்துள்ளார். நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து மாநில துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் முருகானந்தம், திண்டுக்கல் தென் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர் சுதாகரன், மேற்கு மாவட்ட செயலாளர் ஆயை ஜப்பார் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்

அரசு வேலைக்கு படிக்கும் இளைஞர்களுக்கு பழனி துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஆலோசனை வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலையத்தில் அரசு வேலைக்கு படித்து வரும் இளைஞர்களுக்கு அரசு தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து பழனி துணை காவல் கண்காணிப்பாளர் சிவா ஆலோசனை வழங்கினார். மேலும் படித்து வரும் இளைஞர்களுக்கு புத்தகங்கள் கொடுத்து உதவினார். பழனி தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திண்டுக்கல்

பழனி மலைக்கோவிலில் இழுவை ரயில் மீண்டும் இயக்கம்

பழனி மலைக்கோவிலில் கொரோனா காரணமாக மின் இழுவை ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தமிழக அரசின் வழிகாட்டுதல் படி கோவில்கள் திறக்கப் பட்டது. இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் ஏற்பாட்டின்படி பழனி மலைக்கோவிலில் மின் இழுவை ரயில் டிசம்பர் 1 அன்று காலை சிறப்பு பூஜையுடன் பக்தர்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் இயக்கப்பட்டது. அரசு விதிமுறைகளின்படி 50 சதவிகிதம் பக்தர்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் வேலையின்றி சிரமப்படும் தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மாநிலத்தலைவர் G.ரகுபதி, மாநில பொதுச்செயலாளர் A. அன்பழகன் ஆகியோர் ஆலோசனையின் படி ஒன்றியத்தலைவர் A.பாபு, ஒன்றியச் செயலாளர் K.பழனிச்சாமி, ஒன்றியப் பொருளாளர் A.பழனிச்சாமி ஆகியோரின் ஏற்பாட்டின்படி 60 உறுப்பினர்களுக்கு 5 கிலோ அரிசி பை மற்றும் சுகாதார பாதுகாப்புக்கு சானிடைசர் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் கா.ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் V.முரளிதரன், மாவட்ட பொருளாளர் A.பாண்டித்துரை ஆகியோர் […]

திண்டுக்கல்

தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வேலையின்றி சிரமப்படும் தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மாநிலத்தலைவர் ரகுபதி, மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் ஆலோசனையின் படி ஒன்றிய கௌரவத்தலைவர் சந்திரசேகர், ஒன்றியச் செயலாளர் மதுரைவீரன், ஒன்றியப் பொருளாளர் குழந்தைவேல், ஒன்றிய செய்தி தொடர்பாளர் முனியாண்டி, ஒன்றிய துணைத்தலைவர் மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், கோவிந்தராஜ், சிவக்குமார் ஆகியோரின் ஏற்பாட்டின்படி 100 உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி அன்று முககவசம், 5 கிலோ அரிசி பை மற்றும் […]