கடலூர்

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் – பக்தர்கள் வழிபாடு

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 10:00, மதியம் 1:00, இரவு 7:00, 10:00 மற்றும் 29ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கும், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

கடலூர்

கடலூரில் அனைத்து துறை அதிகாரிகளோடு ஆய்வு – கடலூர் சிறப்பு கண்காணிப்பாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

கடலூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமுறி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த கடலூர் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில் […]

கடலூர்

சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு கைது

இந்து தர்மம் (மனு தர்மம்) பெண்கள் அனைவரையும் விபச்சாரிகளாக பாவிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அதனையடுத்து திருமாவளவனுக்கு எதிராக டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்து மதம் மீது எப்போதும் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்ற பரப்புரையை பாஜக செய்து வருகிறது. சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்ய பாரதிய ஜனதா கட்சியினர் […]