செங்கல்பட்டு

நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் நிவாரண பொருட்களை வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், சாலூர் ஊராட்சி, ராமாபுரம் இருளர் குடியிருப்பு பகுதியில் 54 இருளர் பழங்குடி குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள ஏரி நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் நிரம்பி மழை நீர் குடியிருப்பை சூழ்ந்தது. இதனால் மிகுந்த அவதியுற்ற அவர்களை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் நேரில் சந்தித்து அவர்கள் தங்குவதற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.