அரியலூர்

புரட்டாசி மாத சனிக்கிழமை – கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு

அரியலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் கொரோனோ வைரஸ் பரவல் அச்சுறுத்தி கொண்டிருப்பதால், இந்து சமய அறநிலையத் துறையால் வெளியிடப்பட்டுள்ள கொரோனோ வைரஸ் பரவலை தடுப்பதற்கான வழிகாட்டுதலை பின்பற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இடையே கொரோனா வைரஸ் தொற்று வர வாய்ப்புகள் உள்ளதை தொடர்ந்து, புரட்டாசி மாத சனிக்கிழமை உள்பட மாதம் முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி இல்லை என்பதை ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் தெரிவித்துள்ளனர்.