தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வருகின்ற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்திட தடை விதித்துள்ளது. இந்த தடைகளை நீக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் அய்யம்பேட்டை பஸ் ஸ்டாப் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட இளைஞரணி தலைவர் பரத் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி தலைவர் இந்திரஜித் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் […]

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

கிங்ஸ் ரோட்டரி சங்கம் கொரோனா பேரிடர் காலங்களில் ஏழை எளிய பொதுமக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார் முன்னிலையில், கிங்ஸ் ரோட்டரி சங்க தலைவர் சந்திரகாண்டீபன் தலைமையில் 300 நபர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் 500 நபர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்க செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி

பாபநாசம் மற்றும் அம்மாப்பேட்டை வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, குறுவை தொகுப்பு திட்டம் – 2021, விவசாயிகளுக்கு 100% மானியத்தில் இரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கபிஸ்தலத்தில் நடைபெற்றது. பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லா விவசாயிகளுக்கு தொகுப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வன், […]

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை நகர வணிகர் பேரமைப்பின் சார்பில் கொரொனா நிதி

பட்டுக்கோட்டையில் சில தினங்களுக்கு முன்பாக விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் பேரமைப்பின் பட்டுக்கோட்டை கிளை துவங்கப்பட்டது. நகர வணிகர் சங்க பேரமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யசோதா வெங்கடேசன் தலைமையில் வணிகர் பேரமைப்பின் நிர்வாகிகள் சார் ஆட்சியர் பாலச்சந்தரிடம் கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் நிதியாக ஒரு லட்சத்துக்கான காசோலையை முதல்கட்டமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர வணிகர் பேரமைப்பின் கவுரவ தலைவர் பழனியப்பன் களப்பாடியார், பொதுச் செயலாளர்கள் இமானுவேல் ராஜ், இளங்கோவன், பொருளாளர் ஜெயக்குமார், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் […]

தஞ்சாவூர்

மத்திய அரசின் வீரதீர செயலுக்கான விருதுக்கான தேர்வில் தஞ்சாவூர் போலீஸார் தேர்வு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு மேலதெருவை சேர்ந்தவர் ராஜ்கண்ணன் (35). இவர் கடந்த 2010-ம் ஆண்டு போலீஸில் பணிக்கு சேர்ந்து, தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவு காவலராக 10 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். தற்போது பட்டுக்கோட்டை நகர போலீஸ் ஸ்டேஷனின் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு பணிக்காக காலையில் ஊரில் இருந்து தஞ்சாவூருக்கு ராஜ்கண்ணன் சென்றுள்ளார். அப்போது தஞ்சாவூர் ஆத்துபாலம் அருகே சென்ற போது, கல்லணை கால்வாய் ஆற்றில் சிறுவன் ஒருவன் தவறி […]

தஞ்சாவூர்

பாபநாசம் அருகே ஆற்றில் குளிக்க சென்ற 11-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி சாவு

பாபநாசம் பேரூராட்சி, தெற்கு முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சபீர் அஹமது (47). இவரது மகன் இர்பான் அஹமது (16) ராஜகிரியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது பாட்டி வீடான கோவிந்தகுடிக்கு இர்பான் அஹமது சென்றுள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் அங்குள்ள திருமலைராஜன் ஆற்றில் இர்பான் அஹமது குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்றபோது சுழலில் சிக்கினார். உடனே அருகில் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் […]

தஞ்சாவூர்

மழையினால் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி – தந்தை, கணவர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மருவூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகள் தேவகி,(45) மருமகன் சுப்பிரமணி. இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மூவரும் துாங்கிக்கொண்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை பெய்த தொடர் மழையினால், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் தேவகி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், தேவகியின் கணவர் சுப்பிரமணி, தேவகியின் தந்தை கல்யாணசுந்தரம் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு […]

தஞ்சாவூர்

மலேசியாவில் இறந்த பாபநாசம் பெண்ணின் உடல் 52 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா தென்சருக்கை கிராமத்தை சேர்ந்தவர். சந்திரசேகரன் (வயது 48) இவருடைய மனைவி பத்மினி (வயது 43) இவர்களுக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளனர். பத்மினி தனது கணவருடன் மலேசியாவில் வீட்டு வேலை செய்ய சென்றார். கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்திரசேகரன் பாபநாசத்திற்க்கு மீண்டும் திரும்பி வந்துவிட்டார். தொடர்ந்து பத்மினி மட்டும் மலேசியாவில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பத்மினி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு 2020 டிசம்பர் மாதம் […]

தஞ்சாவூர்

பாபநாசம் தெற்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் படத்திறப்பு விழா

சரபோஜிராஜபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாபநாசம் தெற்கு ஒன்றிய விவசாய அணி செயலாளருமான குஞ்சுபிள்ளை படத்தை தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான எம்.ரெங்கசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூர் கழக செயலாளர் பிரேம்நாத் பைரன், மாவட்ட கழக பொருளாளர் ஏஜிஎன். கிருஷ்ணசாமி, மாவட்ட பிரிவு செயலாளர்கள் திவாகரன், ஆனந்தி, ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன், அய்யம்பேட்டை பேரூர் கழக […]

தஞ்சாவூர்

டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு – அமைச்சர்கள் பங்கேற்பு

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 12 ஆம் தேதி திறந்து வைத்தார். கல்லணைக்கு காவிரி நீர் புதன்கிழமை அதிகாலை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை புதன்கிழமை காலை திறக்கப்பட்டது. கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள் நகர்ப்புற வளர்ச்சி துறை கே.என். நேரு, […]